×

தேங்காய் பொங்கல்

தேவையானவை:

பச்சரிசி 1 கப்,
பாசிப்பருப்பு ½ கப்,
தேங்காய் துருவல் ½ கப்,
பொடித்த வெல்லம் 2 கப்,
நெய் ¼ கப்,
ஏலத்தூள் ½ டீஸ்பூன்,
முந்திரி,
திராட்சை தலா 10.

செய்முறை:

அடுப்பில் குக்கரில் அரிசி, பருப்பை குழைய வேக வைக்கவும். தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை, வெல்லத்தை மிக்ஸியில் அரைக்கவும். இதனை குழைய வேகவைத்த அரிசி, பருப்பு கலவையில் கொட்டி, நெய், ஏலத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து கிளறி இறக்கவும். பின் மீதி உள்ள முந்திரி, திராட்சையை மேலே தூவி இறக்கவும். ருசியான தேங்காய் பொங்கல் தயார்.

The post தேங்காய் பொங்கல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சைனீஸ் காளான் சூப்